×

கர்நாடகாவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 50 பேருக்குவாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் அதிருப்தி

கர்நாடகா: கர்நாடகாவில் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர்கள் 50 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தது. இதனால் பாஜகவில் அதிருப்தி நிலவி வருகிறது. மே 10ஆம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. கர்நாடகா சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாஜக புதிய யுக்தியை கைப்பற்றி இருக்கிறது. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் மீது கடுமையான அதிருப்தி இருப்பதாக உளவுத்துறை உள்பட பல்வேறு தகவல்கள் பாஜகவுக்கு எட்டி இருக்கிறது.

அதனால் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 52 பேருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த 52 பேர் பலர் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இன்று சிமோகாவில் அமைச்சர் ஈஸ்வரப்பா அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அவர் நேற்று பட்டியல் வெளியாவதற்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

தம்மை தேர்தலில் நிற்க வேண்டாம் என்று தலைமை கேட்டுக்கொண்டதாகவும் அதனால் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று தெரிவித்தார். நேற்று வெளியான பட்டியலிலும் அவரது பெயர் இடம்பெறவில்லை, இந்த சூழ்நிலையில் தான் அவரது ஆதரவாளர்கள் சிமோகாவில் மாநகராட்சி கவுன்சிலர்கள் 50க்கும் மேற்பட்டோர் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக தலைமைக்கு கடிதம் எழுதினர். மேலும் இது தொடர்பாக மாநில தலைவர் பெங்களூருக்கு சென்று வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தனர்.

The post கர்நாடகாவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 50 பேருக்குவாய்ப்பு மறுக்கப்பட்டதால் பாஜகவில் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Karnataka ,bajaga ,Dinakaran ,
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...