×

ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடான நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடான நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பக்க செய்தியில், கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடி, ஐஐஎம் போன்ற ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் பட்டியலின, பழங்குடியின, ஓபிசி மாணவர்கள் 20,000 பேர் கல்வியை தொடராமல் இடைநின்றுள்ள அதிர்ச்சிகரமான தகவல் நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா எழுப்பிய கேள்வியின் மூலம் அம்பலமானது.

பாஜக அரசு, கல்வி உதவித் தொகையை வெட்டிச் சுறுக்கியுள்ளது. வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் கட்டண உயர்வை புகுத்துகிறது. பிற்போக்கு சிந்தனைகளையும் திணித்து மாணவர்களை வெளியேற்றும் விதத்தில் செயல்படுகிறது. இடை நிற்றல் பிரச்சனை, மாணவர்கள் தற்கொலைக்கு நிகரான அபாயகரமான பிரச்சனையாகும். உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடான நிலைமைக்கு முடிவுகட்டினாலே, அனைவரும் கல்வி கற்பதற்கு சாதகமான சூழலை இந்த நிறுவனங்களில் ஏற்படுத்திட முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஐஐடி, ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் நிலவும் பாகுபாடான நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : IIT ,IIM ,K. Balakrishnan ,Chennai ,Marxist Communist Party ,K.K. Balakrishnan ,
× RELATED புதுமை கண்டுபிடிப்புகளை உருவாக்க...