×

சாமை வடாம்

தேவையானவை:

சாமை அரிசி – 2 கப்,
ஜவ்வரிசி – ½ கப்,
சீரகம் – 1 டீஸ்பூன்,
பெருங்காயம் – 1 சிட்டிகை,
உப்பு – தேவைக்கு.

செய்முறை:

சாமை அரிசி, ஜவ்வரிசி இரண்டையும் மிஷினில் மாவாக பொடிக்கவும். ஒரு டம்ளர் மாவிற்கு 2 டம்ளர் நீர் ஊற்றி, உப்பு, சீரகம், பெருங்காயம் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறிக் கூழாக்கவும். ஆறியதும் முறுக்கு அச்சில் போட்டு வடாமாகப் பிழியவும். தண்ணீர் கூடுதலாக வைத்து கிண்டி வெங்காயம் நறுக்கி சேர்த்து கிள்ளியும் வைக்கலாம். (வரகு, குதிரைவாலி, அரிசியிலும் செய்யலாம்). வடாம் நன்கு காய்ந்ததும், காற்றுபுகாத டப்பாவில் போட்டு வைக்கலாம். தேவைப்படும் போது பொரித்து சாப்பிடலாம்.

The post சாமை வடாம் appeared first on Dinakaran.

Tags :
× RELATED பரங்கிக்காய் சூப்