×

கடவுள் குறித்த சர்ச்சை பதிவு: மன்னிப்பு கேட்ட பாலிவுட் பாடகர்

புதுடெல்லி: கடவுள் குறித்து பதிவிட்ட கருத்து சர்ச்சையை கிளப்பியதால், பிரபல பாடகர் லக்கி அலி சமூக ஊடகங்களின் மூலம் மன்னிப்பு கோரினார். பிரபல பாலிவுட் பாடகரும், நடிகருமான லக்கி அலி என்பவர் தனது பேஸ்புக் பதிவில், ‘பிரம்மன் என்ற வார்த்தை ஆப்ராம் என்பதிலிருந்து உருவானது’ என்று கடந்த சில நாட்களுக்கு முன் பதிவிட்டிருந்தார். இவரது பேஸ்புக் பதிவு சமூக ஊடக பயனர்கள் மத்தியில் விமர்சனங்களுக்கு உள்ளானது. தொடர்ந்து சர்ச்சையையும் கிளப்பியது. அதையடுத்து அவர் தனது பதிவை நீக்கியது மட்டுமின்றி, மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘அன்புள்ள அனைவருக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால், கடந்த சில நாட்களுக்கு முன் நான் பதிவிட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பதை உணர்கிறேன். இந்த பதிவால் யாருடைய மனதாவது புண்படுத்தப்பட்டோ, மன உளைச்சலையோ, கோபத்தையோ ஏற்படுத்தி இருந்தால், அதற்காக மிகவும் வருந்துகிறேன். எனது பதிவின் நோக்கமானது, அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும் என்ற நோக்கில் பதிவிட்டேன். ஆனால் நான் சொன்ன கருத்து வேறுவிதமாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. எனவே எனது பதிவிற்காக வருந்துகிறேன். உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

The post கடவுள் குறித்த சர்ச்சை பதிவு: மன்னிப்பு கேட்ட பாலிவுட் பாடகர் appeared first on Dinakaran.

Tags : Bollywood ,New Delhi ,Lucky Ali ,God ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...