×

சுவாரஸ்யம்!: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறுமருதூர் ஊராட்சி தலைவராகும் சுயேட்சை வேட்பாளர்..!!

திருச்சி: லால்குடி அருகே சிறுமருதூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் கடல்மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள சுவாரஸ்ய நிகழ்வு நடைபெற்றிருக்கிறது. திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதியில் சிறுமருதூர் பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் ஏற்கனவே வெற்றிபெற்ற வேட்பாளர் இறந்துவிட்டதால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் கடல்மணி, சத்தியநாதன், கன்னியம்மாள் என்ற 3 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மூவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. திருச்சி மாவட்டத்தில் 9 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 3 ஒன்றியக் குழு உறுப்பினர்கள், 2 ஊராட்சித் தலைவர்கள் என மொத்தம் 14 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு கடந்த 9ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 74.08 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தற்போது வாக்குகள் எண்ணும் பணி பலத்த பாதுகாப்புடன் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறுமருதூர் ஊராட்சி தலைவர் தேர்தலில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி என்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்று ஊராட்சி தலைவரானார். ஊரக ஊராட்சி தேர்தலில் கடல்மணி 424 வாக்குகளும், கன்னியம்மாள் 423 வாக்குகளும் பெற்றனர். இதனால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் கடல்மணி வெற்றி வாகை சூடியிருக்கிறார். மற்றொரு வேட்பாளர் சத்தியநாதன் 137 வாக்குகளும் செல்லாதவையாக 5 வாக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6, 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது குறிப்பித்தக்கது. …

The post சுவாரஸ்யம்!: ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சிறுமருதூர் ஊராட்சி தலைவராகும் சுயேட்சை வேட்பாளர்..!! appeared first on Dinakaran.

Tags : Urratsi ,Tiruchi ,Dalmani ,Minarutur Uradchi ,Lalkudi ,
× RELATED மணல் திருடியவருக்கு போலீசார் வலை