×

கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகளால் விபத்து அபாயம்

கோத்தகிரி : கோத்தகிரியில் குஞ்சப்பனை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது கேத்தரின் நீர்வீழ்ச்சி. இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் தடைசெய்யப்பட்ட பகுதிக்கு சென்று வருகின்றனர்.கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதி கேத்தரின் நீர்வீழ்ச்சி ஆகும்.இந்த நீர்வீழ்ச்சியானது சுற்றுலா துறையின் மூலம் அங்கீகரிக்கப்பட்டு வனத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

இந்த நீர்வீழ்ச்சிக்கு நாளுக்கு நாள் உள் மற்றும் வெளி மாவட்ட, மாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு நீர்வீழ்ச்சியின் காட்சி முனையை மட்டுமே பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வனத்துறை மூலமும், காவல்துறை மூலமும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் காட்டேஜூகளில் இருந்து தனி ஒரு தொகையை வனத்துறைக்கு செலுத்தி ஆபத்தான நீர்வீழ்ச்சி அமைந்துள்ள பகுதிக்கு அழைத்து சென்று வருகின்றனர்.

இதுவரை இப்பகுதியில் பலர் நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி உயிரிழந்து மீட்க்கப்பட்ட நிலையில்,சிலரது உடல்கள் இதுவரை கிடைக்காத நிலை இதுவரை உள்ளது.இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு அறிவிப்பையும் மீறியும்,ஆபத்தை உணராமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் சில தனியார் கட்டேஜூகளின் நடவடிக்கைகளால் ஆபத்தான பகுதிகளுக்கு சென்று கரடி, காட்டு மாடு இருக்கும் பகுதிகளை கடந்து தனியார் தேயிலை தோட்டம் வழியாக நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்கின்றனர்.

ஆனால் நீர்வீழ்ச்சி பகுதியில் எவ்வித பாதுகாப்பு வளையங்களோ, சாலை வசதிகளோ இல்லாத நிலையில் வனத்துறையினரும் தனியார் காட்டேஜூகளுக்கு தலை சாய்ப்பதால் ஆபத்தான பயணம் மேற்கொண்டு அப்பகுதிக்கு செல்கின்றனர்.இங்கு சென்று மது பாட்டில்கடம உடைத்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை கேட்டால் நாங்கள் சமூக வலைத்தளங்களில் பார்த்து வந்துள்ளோம்.

இங்கு நாங்கள் ஊராட்சி மன்ற நுழைவு கட்டணம் மற்றும் வாகனம் நிறுத்துவதற்கு ரசீது பெற்று வருகிறோம் என வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.எனவே பாதுகாப்பற்ற நீர்வீழ்ச்சி பகுதியில் குளிக்க தடைசெய்யப்பட்டு இருக்கும் நிலையில் குறிப்பாக நீர்வீழ்ச்சி அமையப்பெற்றுள்ள பகுதியில் பல உயிர் சேதங்கள் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றுள்ள நிலையில் சம்மந்தப்பட்ட துறை உடனே நடவடிக்கை மேற்க் கொண்டு தடை செய்யப்பட்ட பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

The post கேத்தரின் நீர்வீழ்ச்சி பகுதியில் ஆபத்தை உணராமல் அத்துமீறி செல்லும் சுற்றுலா பயணிகளால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Tags : Catherine Falls ,Kothagiri ,Kunjapanai Panchayat Union ,Dinakaran ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்