×

ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல்

சென்னை: ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துமீறலை அடக்கிய தீர்மானம் என்ற தலைப்பில் முரசொலியில் வெளியாகிய தலையங்கத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு முதலில் ஒப்புதல் தர மறுத்தது ஆளுநரின் அத்து மீறல் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அதிரடி தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேறியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை பொறுத்தவரை மாநில அரசுகளுக்கு அதற்கான அதிகாரம் உண்டு என்பது நாடாளுமன்றத்திலேயே தெளிவுப்படுத்தப்பட்டு விட்டது என்று கூறியுள்ள முரசொலி அதன் பிறகும் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்னதுதான் சந்தேகத்திற்குரியதாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்ட கம்பெனிகளை சேர்ந்தவர்கள் சந்தித்தது ஏன் என்ற கேள்விக்கு ஆளுநர் பதில் செல்வதை தவிர்த்தது தான் பிரச்சனையே தவிர ஒன்றியத்தில் ஒரு கட்சி ஆட்சி, மாநிலத்தில் இன்னொரு கட்சி ஆட்சி என்பதல்ல காரணம் என்று அந்த நாளிதழ் கூறியுள்ளது.

கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்ட 2 மணி நேரத்தில் கையெழுத்து போட்டுவிட்டார் ஆளுநர் என்று கூறியிருக்கும் அந்நாள் ஏடு அத்தோடு பிரச்சனை முடிந்து விட்டது என இருக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்டது போல் ஆளுநர்களை பயன்படுத்தி மாநிலத்தில் ஆளும் கட்சிகளை அடக்க பாஜக முயற்சிப்பதாக கூறிருக்கும் முரசொலி இந்த போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

The post ஆளுநர் மூலம் மாநிலங்களை ஆளும் கட்சிகளை அடக்கும் பாஜக-வின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்: முரசொலி சாடல் appeared first on Dinakaran.

Tags : BJP ,Murasoli Sadal ,CHENNAI ,DMK ,Murasoli Chatal ,
× RELATED குடிநீர் பிரச்னையே வராதபடி கோதாவரி...