×

பிரதமர் மோடி முன்னிலையில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி… அசாம் நடனத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல 11,000 கலைஞர்கள் முயற்சி!!

டிஸ்பூர் : அசாமில் பிரதமர் மோடியின் முன்னிலையில் நிகழ்த்தப்பட உள்ள கின்னஸ் சாதனைக்காக பாரம்பரிய பிஹு நடனமாடி 11,000 கலைஞர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். அசாமிய கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அம்சமாக விளங்கும் போஹா பிஹு திருவிழாவில் பிஹு நடனம் இடம்பெறுவது வழக்கம். பிஹு நடனத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் வகையில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஏற்பாடு செய்தது. நாளை மறுநாள் ரூ.8,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைக்க அசாம் மாநிலத்திற்கு வருகை தரும் பிரதமர் மோடியின் முன்னிலையில் கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட உள்ளது.

11,000 நடன கலைஞர்கள் பங்குபெறும் இந்த நிகழ்வில் பெண் நடன கலைஞர்கள் மட்டுமே 7,000 பேர் கலந்து கொள்கிறார்கள். கவுகாத்தியில் உள்ள சருசஜாய் ஸ்டேடியத்தில் 11,ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் ஒத்திகையில் ஈடுபட்டனர். அரங்கமே அதிரும் வகையில் நடன கலைஞர்களை சுற்றி இசை வாத்தியங்கள் முழங்க உள்ளனர். அதற்கு ஏற்றவாறு 11,000 பேரும் ஒரே சீராக நடனமாடி அசத்தும் வகையில் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டனர்.

கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் அரங்கேற உள்ள இந்த கின்னஸ் சாதனை நடனம் 15 நிமிடங்களே நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த 15 நிமிடத்திற்கும் பிரமாண்டங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post பிரதமர் மோடி முன்னிலையில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி… அசாம் நடனத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல 11,000 கலைஞர்கள் முயற்சி!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Assam ,PM ,
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...