×

அரசு பள்ளியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு

மானாமதுரை, ஏப்.12: கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் கட்டுமானப் பணி துவங்கியது.

இந்நிலையில் கட்டிடம் கட்ட பயன்படுத்தப்படும் செங்கல் தரமற்றதாக உள்ளன என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து நேற்று ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சங்கர பரமேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் உள்ளிட்டோர், பள்ளிக்கு சென்று கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதில் வகுப்பறை கட்ட பயன்படுத்த செங்கற்களில் 30 சதவீதம் சரியாக சுடப்படாத செங்கல் என்பது தெரிந்தது. இதனால் மறு உத்தரவு வரும் வரை கட்டிடப்பணிகளை நிறுத்தி வைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

The post அரசு பள்ளியில் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Panchayat Union ,Manamadurai ,Kalkurichi Government High School ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...