×

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிவு

மேட்டூர், ஏப்.12: ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு விநாடிக்கு 1500 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 2,000 கனஅடியாக நீடித்த நிலையில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,500 கனஅடியாக சரிந்துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 1873 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1723 கனஅடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 102.70 அடியாகவும், நீர்இருப்பு 68.38 டிஎம்சியாகவும் உள்ளது.

The post ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.

Tags : Okanagan Cauvery ,Mettur ,Okanagan ,Cauvery ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணை நீர்மட்டம் சரிவு