×

வித்துவான்மானைக்கால் திரவுபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

திருத்துறைப்பூண்டி, ஏப். 12: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வித்துவான்மானைக்கால் திரவுபதி அம்மன் கோயில் திருவிழா கடந்த 6ம் தேதி காப்புக்கட்டி கொடியேற்றத்துடன் துவங்கியது .ஒவ்வொரு நாளும் மண்டகபடி உபயதாரர்களின் சார்பில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் வித்வான் மானைக்கால் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள் சார்பில் திரவுபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவமும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 17ம் தேதி மதியம் 2 மணிக்கு மேல் படுகளகாட்சியும், மாலை 6 மணிக்கு தீமிதி உற்சவமும், தொடர்ந்து இரவு 9 மணியளவில் அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.

The post வித்துவான்மானைக்கால் திரவுபதி அம்மன் கோயிலில் திருக்கல்யாண வைபவம் appeared first on Dinakaran.

Tags : Thirukalyana ,Vidhuwanmanaikal Tirupati Amman Temple ,Thirutharapoondi ,Tiruvarur District ,Thiruthurapoondi ,Vidhuwanmanaikkal Tirupati Amman temple festival ,Thirukalyana Vaibhavam ,Vidhuwanmanaikkal Dirupati Amman temple ,
× RELATED வெங்கடேஸ்வர சுவாமி திருக்கல்யாண வைபவம்