வலங்கைமான், ஏப். 12: ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பில் வலங்கைமானில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் அரவத்தூர் மணி, திமுக கிழக்குஒன்றிய செயலாளர் தட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் சிவநேசன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் தனித்தமிழ்மாறன், டிசிடியூ அமைப்பு செயலாளர் பாண்டியன்,எல் ஐ சி ராஜேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட தலைவர் மன்னை மதியழகன், மாவட்ட துணை தலைவர் நீலன் அசோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
முன்னதாக டிசிடியூ மாவட்ட தலைவர் குலாம்மைதீன் வரவேற்றார். பின்பு மாரியம்மன் கோயிலில் இருந்து பேரணியாக கடைவீதி வழியாக வந்து ராமசாமி கோயில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நீடாமங்கலம் நகர தலைவர் கோவிந்தராஜ், ராஜேந்திரன், பத்மனாபன், ஆலங்குடி செழியன், ஹரித்வாரமங்கலம் தனபாலன், டிசிடியூ மகளிர் அணி உமாமகேஸ்வரி, சுதா,மஞ்சுளா, புகழேந்தி, மருதமுத்து, மோகன் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்ட னர். முடிவில் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ் நன்றி கூறினார்.
The post செவ்வாய்தோறும் படியுங்கள் ராகுல் காந்தி பதவி பறிப்பை கண்டித்து வலங்கைமானில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.
