×

விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு

அரூர், ஏப்.12: தர்மபுரி மாவட்டத்தில் அரூர், கம்பைநல்லூர், மொரப்பூர், பொம்மிடி உள்பட மாவட்டம் முழுவதும் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் முள்ளங்கி பயிரிடப்பட்டுள்ளது. 3 மாத பயிரான முள்ளங்கி பயிரிட ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவாகிறது. தற்போது முள்ளங்கி அறுவடை சீசன் என்பதால் வரத்து அதிகரித்துள்ளது. இதுகுறித்து மொத்த வியாபாரி கூறுகையில், மொத்த விலையில் கிலோ ரூ.8க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. சில்லறை விலையில் கிலோ ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

The post விளைச்சல் அதிகரிப்பால் முள்ளங்கி விலை சரிவு appeared first on Dinakaran.

Tags : Aroor ,Campinallur ,Morapur ,Bommidi ,Dharmapuri ,Dinakaran ,
× RELATED 125 மூட்டை மஞ்சள் ₹12.5 லட்சத்திற்கு ஏலம்