×

திருப்பூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது 3-ம் கட்டமாக மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி

திருப்பூர், ஏப்.12: தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. நமது தமிழ் மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டுக்கான வாய்ப்புகளையும் இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக் கல்வி கழகத்தின் சார்பில் இந்த பரப்புரை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் தமிழ் மரபும்-நாகரிகமும், சமூக நீதி, பெண்கள் மேம்பாடு, சமூகப்பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில்முனைவுக்கான வாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டின் கல்விப் புரட்சி ஆகிய தலைப்புகளின் கீழ் சொற்பொழிவுகள் நடத்த திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக கல்லூரி மாணவர்களிடையே தமிழர்களின் மரபையும், தமிழ் பெருமிதத்தையும் உணர்த்தும் வகையில் பண்பாட்டு பரப்புரை நிகழ்வு நாளை (13-ம் தேதி) திருப்பூர் புனித வளனார் மகளிர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் படிப்போம் நிறைய ! என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, கற்சிலையும் கட்டிடக் கலையும் என்ற தலைப்பில் மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஈரோடு த.ஸ்டாலின் குணசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கருத்துரை ஆற்ற உள்ளனர். எனவே திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக நடைபெறவுள்ள மாபெரும் தமிழ்கனவு என்ற பெயரிலான பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post திருப்பூர் மாவட்டத்தில் நாளை நடக்கிறது 3-ம் கட்டமாக மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : tamil kanadu ,tiruppur ,Tamil Internet Education College ,Lord ,Tiruppur district ,Tamil Nadu ,
× RELATED பல்லடம் அருகே கடன் தொல்லையால்...