திருவாரூர், ஏப். 12: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த முதியவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா வீதிவிடங்கன் கிராமம் பெரும்படுகை பகுதியை சேர்ந்தவர் கேசவன் (58). இவர் அந்த பகுதியில் தொடர்ந்து பாண்டி சாராய விற்பனை மற்றும் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்ட நிலையில் பலமுறை போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும் பின்னர் ஜாமீனில் வரும் பட்சத்தில் தொடர்ந்து இதேபோன்று பாண்டி சாராய விற்பனை மற்றும் மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அண்மையில் நன்னிலம் மதுவிலக்கு போலீசார் இவரை கைது செய்து நன்னிலம் கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் போலீசார் எச்சரிக்கையும் மீறி தொடர்ந்து சட்ட விரோதமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்ததால் இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பரிந்துரை செய்தன் பேரில், இதற்கான உத்தரவினை நேற்று கலெக்டர் சாரு வழங்கினார்.இதையடுத்து நன்னிலம் கிளை சிறையில் இருந்து கேசவன் திருச்சி மத்திய சிறைக்கு போலீசார் மூலம் கொண்டு சென்று அங்கு அடைக்கப்பட்டார்.
The post நன்னிலத்தில் தொடர் சாராய விற்பனை: முதியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.
