×

பாலக்காட்டு காளியம்மன் கோயிலில் பச்சைக்காளி பவளக்காளி திருநடன வீதியுலா: வீடுகள் தோறும் மங்கல பொருள் வைத்து வரவேற்பு

கும்பகோணம், ஏப்.12: கும்பகோணம் பாலக்காட்டு காளியம்மன் கோயில் 64ம் ஆண்டு திருநடனத்திருவிழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்று வீதிகள் தோறும் திருநடனத்துடன் பவனி வந்த பச்சைக்காளி, பவளக்காளியம்மனுக்கு படையலிட்டு தீபாராதனை செய்து வழிபட்டனர். கும்பகோணம் பழைய பஸ் ஸ்டாண்ட் ஏ.ஆர்.ஆர் காலனியில் எழுந்தருளியிருக்கும்  விநாயகர்,  முருகன்,  முனீஸ்வரர்,  பாலக்காட்டு காளியம்மன் இப்பகுதியில் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக போற்றி வணங்கப்படுகிறது. இத்தலத்தின் 64ம் ஆண்டு திருநடன திருவிழா கடந்த மார்ச் 24ம் தேதி வியாழக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக,  பாலக்காட்டு பச்சைக்காளி பவளக்காளி திருநடன வீதி உலா கடந்த 7ம் தேதி தொடங்கி, நேற்று மாலை தெருவாசிகளுக்கு அருள்புரிந்து ஆலயம் வந்து அமர்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நேற்று நண்பகல் பச்சைக்காளி, பவளக்காளி திருநடனத்துடன் பவனி வந்த வீதிகளில், வீடுகள் தோறும் மாவிளக்கு ஏற்றிவைத்து, தட்டில் பழங்கள், தேங்காய், மலர்சரங்கள், எலுமிச்சைபழம், மங்கல பொருட்களான வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் ஆகியவற்றுடன் காளியம்மனை தண்ணீர் நிரப்பிய சொம்பில் வேப்பிலை சொருகி வைத்து, அதன் பாதங்களை குடங்களில் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்வித்து தங்கள் வீடுகளுக்கு வரவேற்றனர். அப்போது பூசாரி தீபாராதனை செய்ய,  பாலக்காட்டு பச்சைக்காளி பவளக்காளி தனது திருக்கரங்களால், பக்தர்களுக்கு திருநீறு பிரசாதங்களை வழங்கியது. தொடர்ந்து நாளை (வியாழக்கிழமை) மாலை பச்சைக்காளி பவளக்காளி ஊஞ்சல் உற்சவம் பூச்சொறிதல் நிகழ்ச்சியும், அதனையடுத்து 14ம் தேதி மதியம் பக்தர்களுக்கு அன்னதானம், 17ம் தேதி விடையாற்றி பூஜையும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், பஞ்சாயத்தார்கள், முக்கியஸ்தர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், இளைஞர் நற்பணி மன்றம், மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

The post பாலக்காட்டு காளியம்மன் கோயிலில் பச்சைக்காளி பவளக்காளி திருநடன வீதியுலா: வீடுகள் தோறும் மங்கல பொருள் வைத்து வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Palakkadtu Kaliyamman ,temple ,Pachakali ,Pavalkali ,Thirunadana ,Mangala ,Kumbakonam ,Palakkadtu ,Kaliyamman ,64th Thirunadanatri Festival ,Palakkadtu Kaliyamman Temple ,
× RELATED கோடை விடுமுறை எதிரொலியாக மீனாட்சியம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்