×

தொடர் மழையால் துவங்கியது விவசாய பணி பழநிக்கு 1,283 மெ. டன் உரங்கள் வந்தது

பழநி : திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாய பணிகள் துவங்கி உள்ளன. விவசாயிகள் நெல், மக்காச்சோளம், பருத்தி, மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர். உரத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பழநி ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில் மூலம் உரங்கள் கொண்டு வரப்பட்டன.யூரியா 906.750 மெட்ரிக் டன்களும், டிஏபி 252.250 மெட்ரிக் டன்களும், சூப்பர் 124.700 மெட்ரிக் டன்களும் கொண்டு வரப்பட்டன. இதில் 654 மெட்ரிக் டன் யூரியா, 185 மெட்ரிக் டன் டிஏபி, 70 மெட்ரிக் டன் சூப்பர் ஆகியவை தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. இப்பணிகளை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பாண்டித்துரை, திண்டுக்கல் வேளாண் உதவி இயக்குநர் (தகவல்- தரக்கட்டுப்பாடு) உமா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்….

The post தொடர் மழையால் துவங்கியது விவசாய பணி பழநிக்கு 1,283 மெ. டன் உரங்கள் வந்தது appeared first on Dinakaran.

Tags : PALANI ,Thindukal district ,Dinakaran ,
× RELATED பழனி முருகன் கோவிலில் ரோப் கார் சேவை நாளை ரத்து