×

(வேலூர்) 50 அடி கிணற்றில் தவறி விழுந்த 2 மான்கள் சாவுஒடுகத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்து

ஒடுகத்தூர், ஏப். 12: ஒடுகத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்த போது 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த 2 மான்கள் பரிதாபமாக உயிரிழந்தது. வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேஷ். இவருக்கு சொந்தமாக கிணற்றுடன் கூடிய விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. இந்நிலையில், வழக்கம்போல் முருகேஷ் நேற்று நிலத்திற்கு சென்று விவசாய பணியை மேற்கொண்டுள்ளார். அப்போது, கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு அங்கு சென்று பார்த்த போது 2 மான்கள் தவறி கிணற்றில் விழுந்து தத்தளித்து கொண்டிருந்தது. இதுபற்றி உடனே ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்படி, தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு 2 மான்களையும் மீட்டனர். ஆனால், இதில் ஒரு மான் ஏற்கனவே இறந்து விட்டது. பின்னர், சம்பவம் குறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்படி வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் வந்து 2 மான்களையும் கைப்பற்றினர். மேலும், உயிருடன் இருந்த மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதனை காட்டு பகுதிக்கு கொண்டு சென்ற போது அந்த மானும் பரிதாபமாக உயிரிழந்தது. பின்னர், 2 மான்களையும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது.

The post (வேலூர்) 50 அடி கிணற்றில் தவறி விழுந்த 2 மான்கள் சாவு
ஒடுகத்தூர் அருகே தண்ணீர் தேடி வந்து
appeared first on Dinakaran.

Tags : Velur ,2 ,Chauudukathur ,Odugathur ,Dinakaran ,
× RELATED திருவாரூர் அருகே காரும், பைக்கும்...