×

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனார் போக்சோவில் கைது

நாகப்பட்டினம்,ஏப்.12: நாகப்பட்டினம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய கொத்தனாரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். நாகப்பட்டினம் அருகே திருக்குவளையை சேர்ந்தவர் ராஜா(30). கொத்தனார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து 8ம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை சிகிச்சைக்காக நாகப்பட்டினம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு டாக்டர் பரிசோதனை செய்த போது 4 மாதம் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்த போது ராஜா தான் கர்ப்பத்திற்கு காரணம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் தாய் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.

The post பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய கொத்தனார் போக்சோவில் கைது appeared first on Dinakaran.

Tags : Mason ,Poxo ,Nagapattinam ,Kothanar ,Nagapattinam… ,Pocso ,Dinakaran ,
× RELATED மனைவியை கத்தியால் குத்தி கொன்று கணவர் தற்கொலை