×

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்

கும்மிடிப்பூண்டி: சோம்பாட்டு ஊராட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலதிட்ட உதவிகளை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார். கும்மிடிப்பூண்டி அடுத்த சோம்பாட்டு ஊராட்சிக்கு உட்பட்ட தர்காஸ் கண்டிகை, ஆதிதிராவிடர் பகுதி, எடைப்பாளையம் ஆகிய இடங்களில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடியேற்றப்பட்டது. மேலும், சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ கலந்து கொண்டார். சோம்பாட்டு ஊராட்சியில் உள்ள 3 இடங்களில் திமுக கொடியேற்றி, இனிப்புகள் வழங்கினார். மேலும் ஏழை, எளிய மக்களுக்கு அரிசி, பள்ளி மாணவருக்கு பென்சில், பேனா எழுது பொருட்களையும் வழங்கினார். பின்னர், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

இதில், சோம்பாட்டு முன்னாள் ஊராட்சி தலைவர் பழனி வரவேற்றார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி (எ) ராஜேஷ் தலைமை தாங்கினார். மீஞ்சூர் ஒன்றிய குழுத் தலைவர் ரவி, ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், தொழில் அதிபர் தினேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் முரளி, கிளை நிர்வாகிகள் தனக்கோடி, ரவிச்சந்திரன், பாபு எழில், பிரபு, ஆனந்தன், சூர்யா பிரகாஷ், சரன்ராஜ், சீனிவாசன், குப்புசாமி, வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, எம்எல்ஏ பேசும்போது, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட உள்ளதாகவும், ஒரு வருடத்தில் இபி மேம்பாலம், சாணபுத்தூர் ஊராட்சியில் இரண்டு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

The post முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Stalin ,T. J.J. Govindarajan ,Kummimdipundi ,Djagar Leader Stalin ,Lombatipundi, D.C. ,J.J. Govindarajan ,MLA ,D.C. J.J. Govindarajan ,Dinakaran ,
× RELATED கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து