×

காஞ்சிபுரத்தில் குட்கா விற்றவர்கள் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளம் தென்கரை பகுதியில் உள்ள ஒரு கடையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், போலீசார் விரைந்து சென்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, ராஜ்குமார் (53). என்பவரின் கடையில், சோதனை செய்தபோது, கடையில் விற்பனைக்காக வைத்திருந்த குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதேபோன்று, காஞ்சிபுரம் அருகே பிச்சவாடி கிராமத்தில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்த, அதே கிராமத்தை சேர்ந்த உமாமகேஸ்வரனை (46), பாலுச்செட்டிசத்திரம் போலீசார் கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

The post காஞ்சிபுரத்தில் குட்கா விற்றவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Gutka ,Kanchipuram ,Tamil Nadu government ,Kanchipuram Sarvatheertha Kulam Tenkarai ,
× RELATED வாகன தணிக்கையின்போது காரில் கடத்தி வந்த 632 கிலோ குட்கா பறிமுதல்!!