×

திரு.வி.க. நகர் சேமாத்தம்மன் கோயிலில் அன்னதான திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது திரு.வி.க. நகர் எம்எல்ஏ பி.தாயகம்கவி பேசுகையில், ‘திரு.வி.க. நகரில் உள்ள சேமாத்தம்மன் கோயிலில் அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்படுமா’’ என்றார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசுகையில், ‘‘சேமாத்தம்மன் கோயில் நான் வசிக்கின்ற பகுதியில் உள்ளது. அக்கோயிலுக்கு ஆண்டிற்கு ரூ.30 ஆயிரம் அளவிற்கு தான் வருமானம். கங்காதீஸ்வரர் கோயிலில் இருக்கின்ற உபரிநிதியை பயன்படுத்தி சேமாத்தம்மன் கோயிலில் அன்னதான திட்டம் ஏற்படுத்துவதற்கு சாத்திய கூறுகள் இருந்தால் நிச்சயமாக பரிசீலிக்கப்படும், என்றார்.

The post திரு.வி.க. நகர் சேமாத்தம்மன் கோயிலில் அன்னதான திட்டம்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Tags : Nagar Seemathamman Temple ,Minister ,PK Shekharbabu ,Chennai ,V.K. Nagar ,MLA ,B. Thayakamkavi ,V.K. ,Seemathamman temple ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி