×

செங்கல்பட்டில் தனிஷ்க் ஷோரூம் திறப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டில் பிரமாண்ட முறையில் தனிஷ்க் ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரமாண்டமான விற்பனையகத்தை செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் தொடங்கியது. தனிஷ்க் நிதிப்பிரிவு இணை துணைத் தலைவர் விஜய் கோவிந்தராஜ் இதனை திறந்து வைத்தார். இதன் பிரமாண்டமான தொடக்க விழாவை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

எந்த நகைக்கடையிலும் வாங்கிய பழைய தங்கத்தை தற்போதுள்ள மிகச் சிறந்த விலைக்கு இங்கு மாற்றிக் கொள்ளலாம். பழைய தங்கத்துக்கு இணையாக 100 சதவீத மதிப்பில் இங்கு எக்ஸ்சேஞ்ச் சலுகையை பெறலாம். சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தங்கம், வைரம், நவரத்தினம், பிளாட்டினம், வண்ணக் கற்கள் ஆகிய நகைகளை இந்த விற்பனையகம் கொண்டு வந்துள்ளது. இது திருமண நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு மையங்களில் ஒன்றாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது.

The post செங்கல்பட்டில் தனிஷ்க் ஷோரூம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Tanishq ,Chengalpattu ,Tanishk ,India ,Tata Group ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்...