×

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஜகதீஷ் டைட்லரின் குரல் மாதிரி பதிவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இதையடுத்து டெல்லி குருத்வாரா புல்பங்காஷ் என்ற இடத்தில் நடந்த கலவரத்தில் பாதல் சிங், தாக்குர் சிங், கரண் சிங் என்ற மூன்று சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். இந்த கலவரங்களை காங்கிரசை சேர்ந்த ஜகதீஷ் டைட்லர், கமல்நாத் மற்றும் சஜ்ஜன் குமார் ஆகியோர் தூண்டி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்குமாறு டெல்லி நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டது.

அதன்படி விசாரணை நடத்தி வந்த சிபிஐ கலவரத்தில் டைட்லருக்கு தொடர்பில்லை என்று 2007ம் ஆண்டும், டைட்லர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என 2009ம் ஆண்டும் டெல்லி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த நிலையில் தற்போது புதிதாக ஆதாரம் கிடைத்துள்ளதாக கூறி சிபிஐ மீண்டும் விசாரணையை துவங்கியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஒன்றிய தடய அறிவியல் ஆய்வகத்தில் ஜகதீஷ் டைட்லர் நேற்று முன்தினம் இரவு வந்தார். இரவு முழுவதும் அவரின் குரல் மாதிரிகளை சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்தனர்.

The post சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு ஜகதீஷ் டைட்லரின் குரல் மாதிரி பதிவு appeared first on Dinakaran.

Tags : Jagadish Tytler ,New Delhi ,Former ,Indira Gandhi ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...