×

விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம்: குமாரசாமி தேர்தல் வாக்குறுதி

கோலார்: விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முன்னாள் முதல்வரும், மஜத தலைவருமான குமாரசாமி தெரிவித்தார். கோலாரில் மஜத கட்சியின் சார்பில் நடந்த பஞ்சரத்னா பேரணியில் கலந்து கொண்டு குமாரசாமி பேசும் போது, ‘ விவசாயிகளின் மகன்களை பெண்கள் திருமணம் செய்யத் தயாராக இல்லை’ என எனக்கு பல இளைஞர்களிடம் இருந்து மனு வந்தது. சட்டப்பேரவை தேர்தல் மஜத தலைமையில் ஆட்சி அமைந்தால், விவசாயிகளின் குழந்தைகளின் திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், அரசு சார்பில் 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இது விவசாய குடும்பத்தை சேர்ந்த மகன்களின் சுயமரியாதை” என்று தெரிவித்தார்.

The post விவசாயிகளின் மகன்களை திருமணம் செய்யும் பெண்களுக்கு ரூ.2 லட்சம்: குமாரசாமி தேர்தல் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Kumaraswamy ,Kolar ,Former ,chief minister ,Majda ,Dinakaran ,
× RELATED கர்நாடகா கோலார் மாவட்டத்தில் வாங்கிய...