×

புழல் பகுதிகளில் காணாமல் போன பெயர் பலகை

புழல்: மாதவரம் மண்டலம் 23, 24, 31, 32, 33 ஆகிய வார்டு பகுதிகளான புழல், காவாங்கரை, கண்ணப்ப சாமி நகர், அண்ணா நினைவு நகர், கதிர்வேடு, எம்ஜிஆர் நகர், சூரப்பட்டு, புத்தாகரம், லட்சுமிபுரம், ரெட்டேரி, கல் பாளையம், விநாயகபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி சார்பில் அனைத்து தெருக்களிலும் நவீன முறையில் பெயர் பலகைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள தெரு பலகைகள் உடைந்துள்ளது. ஒரு சில இடங்களில் உள்ள பெயர் பலகைகளில்அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர்கள் போஸ்டர்களை ஒட்டுகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி மற்றும் சுப நிகழ்ச்சி போஸ்டர்களும் ஒட்டுகின்றனர். இதனால் பெயர் பலகைகள் தெரியாமல் உள்ளது. இதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு வெளியூர்களில் இருந்து வருபவர்கள், தபால்காரர், கூரியர் ஊழியர்கள் முகவரி இல்லாமல் திணறி வருகின்றனர். இதுகுறித்து அந்தந்த வார்டு அதிகாரி உரிய நடவடிக்கை எடுத்து மாநகராட்சி தெரு பெயர் பலகைகளில் போஸ்டர்களை ஒட்டும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், உடைந்து போன பெயர் பலகைகளை சரி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புழல் பகுதிகளில் காணாமல் போன பெயர் பலகை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Madhavaram Mandal ,Ward ,Kavankarai ,Kannappa Sami ,
× RELATED புழல் அருகே பொதுக் கழிப்பிடத்தின்...