×

அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் ‘டாப் சீக்ரெட்’ ஆவணங்கள் ‘லீக்’: உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை

வாஷிங்டன்: அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனின் ரகசிய ஆவணங்கள் லீக் ஆனது குறித்து உளவுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ராணுவ தலைமையகமான பென்டகனின் சில ரகசிய ஆவணங்கள் (டாப் சீக்ரெட்) சமூக ஊடகங்களில் கசிந்துள்ளன. அந்த ஆவணங்களில் அரசின் மிக முக்கியமான ரகசியங்கள் வெளியாகி உள்ளதாகவும், டஜன் கணக்கான ரகசிய ஆவணங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ரகசிய ஆவணங்கள் எவ்வாறு பகிரப்பட்டன என்பது குறித்து தேசிய பாதுகாப்பு முகமைகள் விசாரணை நடத்தி வருகின்றன.

கடந்த 2013ம் ஆண்டில் விக்கிலீக்ஸில் ஆயிரக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்தது. தற்போது அதேபோல் பென்டகனில் இருந்து ரகசிய ஆவணங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த மார்ச் மாதம் பென்டகனின் ‘சீக்ரெட்’ மற்றும் ‘டாப் சீக்ரெட்’ என்று பெயரிடப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆவணங்கள் சமூக ஊடகங்களின் மூலம் கசிந்துள்ளன. இந்த ஆவணங்கள் யாவும் உக்ரைன், இஸ்ரேல், தென் கொரியா, துருக்கி உள்ளிட்ட நட்பு நாடுகளின் போர் பற்றிய தகவல்களை குறிப்பிட்டுள்ளன.

ரகசிய ஆவணங்கள் கசிந்தது குறித்து அமெரிக்க நீதித்துறை குற்றவியல் விசாரணையைத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் வரை இந்த கசிவு குறித்து பென்டகனுக்கு தெரியாது என்று மூத்த அதிகாரிகள் கூறினர். சில ஆவணங்கள் மிகவும் ரகசியம் வாய்ந்தவை என்றாலும், அவை அமெரிக்கா மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு அமைப்புகளுடன் சென்றடைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து உளவுத்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக பென்டகன் தெரிவித்துள்ளது’ என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post அமெரிக்க ராணுவ தலைமையிடமான பென்டகனின் ‘டாப் சீக்ரெட்’ ஆவணங்கள் ‘லீக்’: உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை appeared first on Dinakaran.

Tags : US Military Headquarters ,Pentagon ,Top Secret ,Documents' League ,Washington ,Espy ,United States ,Top Secret' Documents' League ,
× RELATED பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு