×

43 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்: தான்சானியா பள்ளியில் அதிர்ச்சி

டோடோமா: தான்சானியா நாட்டின் தலைநகர் டோடோமாவில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கடந்த 2021-2022ம் ஆண்டுக்கான சிஏஜி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜூலை முதல் 2022 ஜூன் மாதத்திற்கு இடைப்பட்ட ஓராண்டில் நாடு முழுவதும் 42,954 மாணவிகள் கர்ப்பமான நிலையில், பள்ளியை விட்டு இடைநின்றனர். அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை.

கருவுற்ற 42,954 பள்ளி மாணவிகளில் 23,009 பேர் மேல்நிலைப் பள்ளிகளையும், 19,945 தொடக்கப் பள்ளிகளையும் சேர்ந்தவர்கள் ஆவர். 2021ம் ஆண்டில் மட்டும் ஆரம்பக் கல்வியை படிக்க வேண்டிய வயதில் உள்ள 82,236 மாணவிகளில் 28 சதவிகிதம் பேர் கர்ப்பமாகினர். இவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து வரவில்லை. குழந்தை திருமணம் குறித்த விழிப்புணர்வு இல்லாததால், 18 வயது நிரம்பும் முன்பே மாணவிகளுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும், அல்லது தகாத உறவில் மாணவிகள் கர்ப்பமாவது அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post 43 ஆயிரம் மாணவிகள் கர்ப்பம்: தான்சானியா பள்ளியில் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Dodoma ,CAG ,Tanzania ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...