×

இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம், நிலங்களுக்கு அதிமுக ஆட்சியில் வாடகை நிர்ணயம் செய்ததில் குளறுபடி: திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு

சென்னை: இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம், நிலங்களுக்கு அதிமுக ஆட்சியில் வாடகை நிர்ணயம் செய்ததில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளனர்.

இது குறித்து இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த 2006 கலைஞர் ஆட்சி காலத்தில் கட்டிடம் மற்றும் மனை குடியிருப்பு 0.10%, மனை வணிகம் 0.30%, கட்டிட வணிகம் 0.60%, வாடகை நிர்ணயம் செய்யவும், வாடகை செய்ய அரசாணை வெளியிடப்பட்டது. இந்த வாடகை மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் உயர்த்த உத்தரவிடப்பட்டது. இதன் மூலம் வாடகைதாரர்களிடம் நியாயமான முறையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதன்படியே 30.06.2016 நியாய வாடகை பெறப்பட்டு வந்தது. ஆனால் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பொழுது 1.07.2016 முதல் கடந்த அரசாணைகளுக்கு உட்படாத வகையில் தந்தை மதிப்பின் அடிப்படையில் புதிதாக வாடகை நிர்ணயம் அப்போதே ஆணையர் உத்தரவிட்டார். இந்த நூறு சதவீத முதல் ஆயிரம் சதவீதம் வரை கற்பனைக்கு எட்டாத வகையில் வாடகை உயர்த்தப்பட்டது.

பிறகு பத்திர பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பை குறைத்த போதும் உயர்த்தப்பட்ட வாடகையே மாற்றி நிர்ணயம் செய்யப்படவில்லை. கோயில் மலை மற்றும் கட்டிடம் வாடகைதாரர்கள் உயர்த்தப்பட்ட வாடகையை கட்ட முடியாமல் திணறி வருகின்றனர். கடந்த 1 7 2016க்கு பிறகு நிர்ணயிக்கப்பட்ட வாடகையே வசூலிக்கப்பட முடியாமல் கோயில் அதிகாரிகளும் சிரமப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக கோயில் மனையில் குடியிருப்பர் சங்கம் பல்வேறு கட்டங்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தலைமைச் செயலாளர் தலைமையில் வாடகை நிர்ணயக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக் குழுவால் இன்றளவும் வாடகையை நிர்ணயம் செய்ய முடியாமல் உள்ளது . இதனால் சந்தை மதிப்பு அடிப்படையில் வாடகை வசூலிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் மற்றும் தொழிலாளர் யூனியன் சார்பில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட அரசாணையின்படியே வாடகை வசூல் செய்ய வழிவகை செய்ய வேண்டும் அல்லது புதிதாக திருத்தப்பட்ட வாடகை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட வேண்டும். வாடகைதாரர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வாடகை நிலுவை தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளது. இந்த வழக்குகளில் சமரசம் செய்யும் பட்சத்தில் வழக்குகளுக்கு உண்டாகும் செலவு ஆவது குறையும்.

இந்த சூழலில் 2019 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான மறு வாடகை நிர்ணயம் செய்ய செயல் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கோயில் நிர்வாகம் வாடகை நிர்ணயத்தில் கடுமையான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலை துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி நியாய வாடகை நிர்ணய குழு பரிசீலிக்கும் போது சங்கத்தின் பிரதிநிதிகளையும் இணைத்து அவர்களின் கருத்தையும் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கட்டிடம், நிலங்களுக்கு அதிமுக ஆட்சியில் வாடகை நிர்ணயம் செய்ததில் குளறுபடி: திருக்கோயில் நிர்வாக அதிகாரிகள் சங்கம் பகீர் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Charities Department ,AIADMK ,Sangam ,Temple Management Officers ,Bhakir ,Chennai ,Hindu Religious Welfare Department ,
× RELATED கோயில்களில் காவலர் பணியிடங்கள் நேரடி நியமனம்