×

மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் விவசாயியை திருமணம் செய்யும் பெண்களுக்கு 2 லட்சம்: குமாரசாமி அதிரடி அறிவிப்பு

டெல்லி: மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் விவசாயியை திருமணம் செய்யும் பெண்களுக்கு 2 லட்சம் பணம் வழங்கப்படும் என குமாரசாமி அதிரடி வாக்குறுதி அளித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் களத்தில் அனைத்து கட்சிகளும் மக்களை கவருவதற்காக பல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் 200 யூனிட் இலவசம் மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 ஊக்கத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் மாதம் ஊக்கத்தொகை என பல அறிவிப்புகள் வெளியிட்டது. பாஜக தனது ஆட்சி சாதனையை முன்வைத்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறது. இதனிடையே மதசார்பற்ற ஜனதா தளமும் மக்களை கவரும் பல தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.

கோலார் நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட குமாரசாமி, மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சி அமைத்தால் விவசாயிகளை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு இரண்டு லட்சம் பணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தற்பொழுது உள்ள காலகட்டத்தில் விவசாயிகளை பெண்கள் திருமணம் செய்ய முன்வராக நிலை உள்ளது. அதை மாற்ற வேண்டும் என்பதால் தான் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

The post மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தால் விவசாயியை திருமணம் செய்யும் பெண்களுக்கு 2 லட்சம்: குமாரசாமி அதிரடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Janata Dal ,Kumaraswamy ,Delhi ,
× RELATED நவராத்திரியின்போது மீன் சாப்பிடும் தேஜஸ்வி யாதவ்: பாஜவினர் கண்டனம்