×

புதுச்சேரியில் திருடிய பொருட்களை பார்சலில் திருப்பி அனுப்பிய கொள்ளையன்

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கேமரா பேக், ஐ-போனை திருடிய கொள்ளையன், பார்சலில் திருப்பி அனுப்பினார். போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் ராஜேஷிடம் இருந்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் தீவிரமாக தேடி வந்த நிலையில் டிராவல் பேக், ஐபோனை பார்சல் மூலம் கொள்ளையன் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கேமரா, ஸ்டாண்டு, லைட்ஸ் ஆகியவற்றை அடுத்தடுத்த பார்சலில் அனுப்புவதாக கொள்ளையன் குறுஞ்செய்தி அனுப்பி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

The post புதுச்சேரியில் திருடிய பொருட்களை பார்சலில் திருப்பி அனுப்பிய கொள்ளையன் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,PTO STUDIO ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!