×

நடுக்கடலில் சட்டவிரோதமாக படகுகளில் பயணித்துவந்த 1,200 ஆப்ரிக்க அகதிகள் மீட்பு..!!

இத்தாலி: இத்தாலி அருகே நடுக்கடலில் இரண்டு படகுகளில் தத்தளித்து கொண்டிருந்த 1200 அகதிகளை அந்நாட்டு கடற்படையினர் மீட்டு கரை சேர்த்துள்ளனர். இத்தாலி கடல் எல்லை பகுதியில் அந்நாட்டு கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு படகுகள் கடலில் தத்தளிப்பதை கண்டுள்ளனர். இதை அடுத்து உஷாரான கடற்படையினர் சிசிலி அருகே மீன்பிடி படகுகளில் வந்த எண்ணுறு பேரை மீட்டு வணிக கப்பலில் ஏற்றி கரை சேர்த்தனர்.

இதே போல் கலாப்ரியா அருகே கரை சேர முடியாமல் அலைக்கழிக்கப்பட்ட படகில் இருந்து குழந்தைகள் உள்பட 400 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். இரு படகுகளிலிருந்தும் மீட்கப்பட்ட 1,200 அகதிகளும் வாட ஆபிரிக்காவில் இருந்து மத்திய தரை கடல் பகுதி வழியாக சட்ட விரோத கடல் பயணத்தை மேற்கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த வாரம் இதே போல் தண்ணீரில் தத்தளித்த 800 அகதிகளை இத்தாலி கடற்படையினர் மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Italy ,Middle Sea ,
× RELATED ஒரே நாடு, ஒரே இட்லி என சுடப்பார்க்கிறார் மோடி; நடிகர் கருணாஸ் கலாய்