×

கேரளாவில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டையொட்டி அதில் பங்கேற்ற தலைவர்களின் படங்களை அவ்வூர் சுவர்களில் வரையும் பணி துவக்கம்

கேரளா: கேரளாவில் வைக்கம் போராட்டம் நூற்றாண்டையொட்டி அதில் பங்கேற்ற தலைவர்களின் படங்களை அவ்வூர் சுவர்களில் வரையும் பணி துவங்கப்பட்டுள்ளது.கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியில் உள்ள மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டவர்கள் செல்வதற்கு இருந்த தடைகளை விளக்க கோரி நடந்தது தான் வைக்கம் போராட்டம்.

1924 மார்ச் 30ம் தேதி தொடங்கிய இந்த போராட்டத்தின் நூற்றாண்டு வெற்றி விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகின்றது. இதையொட்டி போராட்டத்தில் பங்கேற்ற வீரர்கள் உருவங்களை ஓவியங்களாக வரையும் பணி வைக்கத்தில் தொடங்கப்பட்டுள்ளது.இதனால் வைக்கம் போராட்டம் குறித்து எலாம் தலைமுறையினரும் புரிந்து கொள்ள முடியும் என்று வைக்கம் ஓவியர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடந்த 1ம் தேதி வைக்கம் போராட்டம் நூற்றாண்டு விழாவை வைக்கத்தில் துவங்கிவைத்தனர். இதன் ஒரு பகுதியாக தற்போது வைக்கம் போராட்டம் குறித்த நிகழ்வுகளையும் போராட்டங்களில் கலந்து கொண்டு தலைவர்களின் உருவப்படங்களை சுவர்களில் வரைந்து வருகின்றனர். மகாத்மா காந்தி, ஸ்ரீ நாராயண குரு, தந்தை பெரியார், கே.பி.கேசவ மேனன், ஆகிய 9 தலைவர்களின் உருவப்படங்களும், போராட்ட நிகழ்வுகளும் ஓவியங்களாக இடம்பிடித்து வருகின்றன.

Tags : Vaikkam struggle ,Kerala ,Avvur. ,Kottayam District ,
× RELATED வயநாடு அருகே கேரள அரசு அலுவலகத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்