திருவள்ளுர்: சினிமா பாணியில் தங்களது கிராமத்தில் 7 குளங்களை காணவில்லை என்று பொன்னேரி கோட்டாட்சியரிடம் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த சோழவரம் புதூர் கிராமத்தில் பல குளங்களை காணவில்லை என்பது தான் அந்த பகுதி மக்களின் புகாராகும். திரைப்படத்தில் வந்த கிணற்றை காணோம் என்ற காமெடி அனைவரின் கவனத்தையும் இரத்தத்துடன் வயிறு குலுங்கவும் சிரிக்க வைத்தது.
அதனை நினைவு படுத்தும் வகையில் திருவலூர் மாவட்டம் புதூர் கிராமத்தில் 2018ம் ஆண்டு முதல் தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் 7 குளங்களை காணவில்லை என்று நிஜமாகவே தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சிவகுமார் என்ற இளைஞர் இது குறித்து வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஏழு குளங்களை காணவில்லை என்ற வாசக அடங்கிய பெயர் பலகையோடு சென்று கோட்டாட்சியரிடன் புகார் மனு அளித்தார்.
தனியார் ஆக்கிரமிப்பு காரணமாக தங்கள் வாழ்வாதாரமும் கால்நடைகளின் நீராதாரமும் உள்ள 7 குளங்களை காணோம் என்றும் அதில் கூறியுள்ளார். மனு அளித்த கையேடு அங்கு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இது குறித்து விசாரித்த கோட்டாட்சியர் திருமதி.ஐஸ்வர்யா நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதான படுத்தியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. 7 குளங்களை காணவில்லை என்று அளிக்கப்பட்ட புகார் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
The post சினிமா பாணியில் தங்களது கிராமத்தில் 7 குளங்களை காணவில்லை என்று பொன்னேரி கோட்டாட்சியரிடம் புகார்..!! appeared first on Dinakaran.