×

சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய காவல்துறையினர் இன்று காலை 11.30 மணிக்கு கலாஷேத்ராவில் விசாரணை நடத்தவுள்ளனர்

சென்னை: சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய காவல்துறையினர் இன்று காலை 11.30 மணிக்கு கலாஷேத்ராவில் விசாரணை நடத்தவுள்ளனர். அதன் இயக்குனர், துணை இயக்குனர், அதுமட்டுமின்றி கலாஷேத்ரா கல்லூரியின் முதல்வர் ஆகியோருடன் விசாரணை நடத்தவுள்ளனர்.

தேர்வுகள் நடத்துவதால், தேர்வுகள் முடிந்த பிறகு மாணவ, மாணவிகளிடமும் அவரகள் விசாரணை நடத்த திட்டம்மிட்டுள்ளனர். கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக உதவி பேராசிரியர் ஹரி பத்மன், கடந்த வாரம் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

மேலும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறி தற்காலிக பணியாளர்கள் மூன்று பேர் அவர்கள் நிரந்தரமாக அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஹரி பத்மன்னும் பணியிடம் நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் தனக்கு ஜாமின் கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அவருக்கு ஜாமின் வழங்கக்கூடாது என அனைத்து இந்திய ஜனநாயக சங்கம் சார்பிலும் இடையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து அந்த மனு மீது இன்று இரண்டாவது நாளாக அந்த ஜாமின் மனுவானது இன்றும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நடக்கவிருக்கிறது.ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தலைவர் நேரில் வந்து விசாரணை நடத்திருக்கிறார். அதேபோல் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி நேரடியாக வந்து விசாரணை நடத்தி இது தொடர்பாக தமிழக தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்பித்திருக்கிறார்.

இந்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் நேற்று பத்திரிகைகளின் வந்த தகவலின் படி தாமாக முன்வந்து, இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளனர். இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மாநில மனித உரிமைகள் ஆணையர் நீதிபதி பாஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இன்று காலை 11.30 மணிக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் காவல்துறை அதிகாரிகள் கலாஷேத்ரா கல்லூரிக்கு வந்து நேரடியாக விசாரணை மேற்கொள்ளவுள்ளார்.

The post சென்னை அடையாறு கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணைய காவல்துறையினர் இன்று காலை 11.30 மணிக்கு கலாஷேத்ராவில் விசாரணை நடத்தவுள்ளனர் appeared first on Dinakaran.

Tags : State Human Rights Commission police ,Kalashetra ,Chennai Adyar Kalashetra College ,Chennai ,Adyar Kalashetra College ,
× RELATED பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள்...