×

விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு

கொடைக்கானல், ஏப்.11: கொடைக்கானல் மேல் மலை கூக்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன் (35). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பழநி கோயிலுக்கு சென்றுள்ளார். வீட்டில் இவரது மனைவி மட்டும் தனியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை பார்த்திபனின் மனைவி, வீட்டின் அருகில் உள்ள கோயிலுக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் முன்புறக் கதவு திறந்திருந்தது. உள்ளே பீரோவும் திறந்த நிலையில் இருந்தது. பீரோவில் இருந்த 16 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தன. இது குறித்து, பார்த்திபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து, நகைகளை திருடியவரை தேடி வருகின்றனர்.

The post விவசாயி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Parthiban ,Gookal ,
× RELATED புழல் சிறைக்குள் நண்பனுக்கு கஞ்சாவை சப்ளை செய்த பார்த்திபன் என்பவர் கைது