×

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திண்டுக்கல், ஏப்.11: திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் விசாகன் தலைமை வகித்தார். நேற்று நடந்த கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 193 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.
மேலும் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 22 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15.25 லட்சம் மதிப்பிலான தொழில் கடனுதவிகள், இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணை, ஆதரவற்ற விதவை பெண்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஒரு பெண்ணிற்கு மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணை, மாற்றுத்திறனாளிகள் 2 நபர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, மூன்றாம் பாலினத்தவர்கள் தொழில் தொடங்க 20 நபர்களுக்கு ரூ.9.95 லட்சம் மானிய கடனுதவி, 12 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.

2022-23-ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. இதில் விவசாயி முரளிதரனுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், விவசாயி சிவசுப்பிரமணியனுக்கு 2ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 3ம் பரிசாக விவசாயி பிச்சைக்கு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. கூட்டத்தில், டி.ஆர்.ஓ., லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, மகளிர் திட்ட இயக்குநர் சரவணன், கலெக்டரின் கூடுதல் நேர்முக உதவியாளர் ராணி, கலால் உதவி ஆணையர் ஜெயசந்திரகலா உட்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : People's Grievance Day ,Dindigul ,Dindigul Collector ,Collector ,Visakan ,Dinakaran ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...