×

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தில் கும்பாபிஷேக விழா

பரமக்குடி,ஏப்.11: பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தில் 300 ஆண்டுகளுக்கு பழமையான சிவாலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பரமக்குடி அருகே பெருங்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு லிங்கமுடைய அட்டாள சொக்கநாதர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கடந்த வெள்ளிக்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கிய இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் நேற்று காலை கோ பூஜை, ஆறாம் காலை யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெற்று, அட்டாள சொக்கநாதர் மற்றும் அங்கயற்கண்ணி அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலசாபிஷேகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து சுயம்புலிங்கமாக வீற்றிருக்கும் அட்டாள சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் அன்னதானமும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஆலய பரம்பரை ஸ்தானிகர்கள் சிவ சங்கர பட்டர், சுப்பிரமணிய பட்டர், வைரவ சுந்தரப்பட்டர், கணேச பட்டர், பரமேஸ்வர பட்டர் மற்றும் சுற்று பகுதிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயத்தில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Kumbabhishek ,Paramakkudy ,Kumbabhishekam ,Melaperungarai ,Perungarai ,Paramakkudi ,Kumbabishek ,
× RELATED கோயில் கும்பாபிஷேக விழா