×

வேதாரண்யத்தில் 2 புதிய ரேஷன் கடை திறப்பு

வேதாரண்யம், ஏப்.11: வேதாரண்யம் தாலுகா மருதூர் வடக்கு மற்றும் கருப்பம்புலம் ஆகிய 2 ஊராட்சிகளில் புதிய நியாய விலை கடை திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 2 ஊராட்சியிலும் புதிய நியாய விலை கடை திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

இதையொட்டி நேற்று காலை தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தலைமை வகித்து இரண்டு நியாய விலை கடையை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரிசி, பருப்பு, சீனி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் உதயம் முருகையன், நகரமன்ற தலைவர் புகழேந்தி, தலைஞாயிறு திமுக ஒன்றிய செயலாளர் மகாகுமார், மாவட்ட துணை செயலாளர் ரவிச்சந்திரன் மாவட்ட கவுன்சிலர் சோழன் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரிபாலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யத்தில் 2 புதிய ரேஷன் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Marudhur North ,Karupampulam ,Dinakaran ,
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...