×

குளித்தலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்தது: புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குளித்தலை, ஏப். 11: திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் இருந்து தென்கரை வாய்க்கால் வழியாக செல்லும் வலுவிழந்த நிலையில் உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மருதூர் பாலத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மருதூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட திருச்சி கரூர் சாலையில் தென்கரை வாய்க்கால் வழியாக செல்லும் பாலம் உள்ளது . இந்தப் பாலம் வழியாக மருதூரில் இருந்து மேட்டு மருதூர் கூடலூர் ,பணிக்கம்பட்டி, மேலப்பட்டி, வளையப்பட்டி, நல்லூர், பணிக்கம்பட்டி சந்தை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இவ் வழியாகத்தான் தினந்தோறும் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்கின்றன.

மேலும் கரும்பு ,நெல், வாழை சாகுபடி செய்து அறுவடை செய்ய வேண்டும் என்றால் வாகனங்கள் இவ்வழியாகத்தான் சென்று பல்வேறு கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் நிலை இருந்து வருகிறது. நகர பேருந்துகள் இந்த வழியாக தினந்தோறும் சென்று வருகிறது. இந்நிலையில் தென்கரை வாய்க்கால் குறுக்கே இருக்கும் பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதால் தற்போது இப்ப பாலம் வலுவிழந்து, பழுதடைந்த நிலையில் உள்ளது.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் தினந்தோறும் கடந்து செல்கின்றனர். மேலும் தென்கரை வாய்க்கால் தண்ணீர் விடும் நிலையில் பாலத்தின் அடிப்பகுதி பழுதடைந்து நிலையில் பல மாதங்கள் தண்ணீரில் இருப்பதால் பாலத்தின் அடிப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக அரிப்பு ஏற்பட்டு கட்டிட செங்கல் கற்கள் அரித்துக் கொண்டே போகிறது. இதனால் பாலம் மேலும் வலுவிழக்குகிறது. இதனைக் கண்டு சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட மருதூர் தென்கரை வாய்க்கால் பாலத்திற்கு பதிலாக புதிதாக பாலம் கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post குளித்தலை அருகே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்தது: புதிய பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Bathe ,Bathing ,Englishman ,Trichy-Karur ,South Drain ,Dinakaran ,
× RELATED ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...