×

தலைவாசல் அருகேடாஸ்மாக் கடையில்கொள்ளை முயற்சிபோலீசாரை கண்டதும் மர்மநபர்கள் ஓட்டம்

சேலம், ஏப்.11: தலைவாசல் அருகே சரியான நேரத்தில் போலீசார் சென்றதால் டாஸ்மாக் கடையில் நடக்க இருந்த கொள்ளை தடுக்கப்பட்டது. சேலம் மாவட்டம் தலைவாசல் பக்கமுள்ள மும்முடியில் ஆற்றோரத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. நேற்று அதிகாலை 3 மணிக்கு தலைவாசல் எஸ்.எஸ்.ஐ. அண்ணாமலை, ஏட்டு வரதராஜன் ஆகியோர் ரோந்து சென்றனர். டாஸ்மாக் கடை அருகே வந்தபோது கடையின் ஷட்டர் திறந்து கிடந்தது. இதுகுறித்து டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக ஊழியர்கள் விரைந்து சென்றனர். ஆனால், பணமோ, மதுபாட்டிலோ திருட்டு போகவில்லை. ரோந்து சென்ற போலீசார் சைரன் போட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்த மர்மநபர்கள், தப்பி சென்றிருப்பது தெரியவந்துள்ளது. சரியான நேரத்தில் ரோந்து சென்றதால் மதுபானங்கள் கொள்ளை போகவில்லை என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகியுள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

The post தலைவாசல் அருகே
டாஸ்மாக் கடையில்
கொள்ளை முயற்சிபோலீசாரை கண்டதும் மர்மநபர்கள் ஓட்டம்
appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Talivasal ,Salem ,Thalaivasal ,Dinakaran ,
× RELATED சாமி சிலையை சேதப்படுத்திய பள்ளி பஸ் டிரைவர் கைது