×

காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்நெல்லையில் ரூ.6 கோடியில் வீட்டுவசதி வாரிய புதிய அலுவலகம்கலெக்டர் கார்த்திகேயன், மேயர் பிஎம் சரவணன் குத்துவிளக்கேற்றினார்

நெல்லை, ஏப். 11: நெல்லையில் ரூ.6.08 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நெல்லை வீட்டு வசதி வாரிய அலுவலக புதிய கட்டிடத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நெல்லையில் நடந்த விழாவில் கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். பாளையங்கோட்டை தாலுகா தியாகராஜநகர் ரயில்வே கேட் அருகில் அன்புநகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நெல்லை பிரிவு அலுவலகம் இயங்கி வந்தது. இந்த கட்டிடத்தை இடித்து விட்டு ரூ.6.08 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டது. நெல்லை வீட்டு வசதி பிரிவு புதிய அலுவலகத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று காலை திறந்து வைத்தார். தொடர்ந்து நெல்லையில் நடந்த விழாவில் கலெக்டர் கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் குத்துவிளக்கேற்றி புதிய அலுவலகத்தை பார்வையிட்டு மரக்கன்றுகள் நட்டினர்.

இந்த புதிய அலுவலக கட்டிடம் 24,027 சதுர அடி கட்டிட பரப்பளவு கொண்டது. தரை தளத்தில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தரை தளத்தில் 12,041 சதுர அடியும், முதல் தளத்தில் 11,550 சதுர அடியும், 2வது தளத்தில் 436 சதுர அடி பரப்பளவும் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தில் அலுவலக உபயோகத்திற்கு ஏற்ப சிறு சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு கலந்தாய்வு அரங்கு, கணினி பிரிவு, பதிவறை, உணவருந்தும் அறை, இருபாலருக்கும் தனித்தனியே கழிவறை மற்றும் மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குடிநீர் வசதிக்கான ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கேமரா உட்பட அனைத்து வசதிகளும் அமைந்துள்ளது. திறப்பு விழாவில் செயற்பொறியாளர் எட்வின் சுந்தர்சிங், உதவி பொறியாளர் ேவலப்பன், கவுன்சிலர்கள் வில்சன் மணித்துரை, சுந்தர், விற்பனை மேலாளர் அருண் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

The post காணொலியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லையில் ரூ.6 கோடியில் வீட்டுவசதி வாரிய புதிய அலுவலகம்
கலெக்டர் கார்த்திகேயன், மேயர் பிஎம் சரவணன் குத்துவிளக்கேற்றினார்
appeared first on Dinakaran.

Tags : CM ,G.K. Stalin ,Housing Board ,Nellelli ,Collector ,Karthigayan ,Mayor ,PM ,Saravanan Kuttu ,Paddy, Ab. 11 ,Paddy Housing Facility Board Office ,Nelli ,B.C. ,NellerallyCollector ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே...