×

புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை எம்.மூர்த்தி பிறந்தநாள் விழா: பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ மலர் தூவி மரியாதை

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம்.மூர்த்தியின் பிறந்தநாள் விழா பூந்தமல்லி ஒன்றியம், ஆண்டரசன் பேட்டையில் நடைபெற்றது. விழாவிற்கு மாநில நிர்வாகிகள் எம்.முகிலன், எம்.மாறன், ஐ.ஏழுமலை, பழஞ்சூர் பி.வின்சென்ட், பா.காமராஜ், முல்லை கே.பலராமன், டி.ருசேந்திரகுமார், பி.மாரி, மணவூர் ஜி.மகா, ஆர்.சரவணன், கூடப்பாக்கம் இ.குட்டி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். கே.எஸ்.ரகுநாத், என்.மதிவாசன், என்.பி.முத்துராமன், ஏ.கே.சிவராமன், ராக்கெட் ரமேஷ், சென்னீர் ஜி.டேவிட்ராஜ், நயப்பாக்கம் டி.மோகன் ஆகியோர் வரவேற்றனர். விழாவை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் கட்சித் தலைவர் பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கினார்.

விழாவில் வழக்கறிஞர் கே.எம்.ஸ்ரீதர், பி.சைமன்பாபு, வலசை எம்.தர்மன், பரீஸ் ஜி.பன்னீர், வியாசை பா.சிகா, என்.முரளி, எஸ்.பி.சி.தனசேகர், டி.கே.சீனிவாசன், எஸ்.ஏகாம்பரம், பி.பெரமையன், சி.பி.குமார், இ.ஜேம்ஸ், டி.கே.சி.வேணுகோபால், சிட்கோ இ.ராஜேந்திரன், சிறுகடல் த.கோபிச்சந்திரன், ஜி.லோகு, திருவூர் ஆர்.கே.நாகா, வேப்பம்பட்டு சி.டி.தியாகு, புட்லூர் எம்.டேனி, தங்கனூர் சுரேஷ், பட்டாபிராம் எஸ்.பிரேம்குமார், செஞ்சி ஜெ.ஜவகர், காட்டுப்பாக்கம் எஸ்.டேவிட், தொழுவூர் டி.எம்.எஸ்.கோபிநாத், செவ்வை ஆர்.ராபர்ட், மாவட்ட மாணவர் அணி தலைவர் நேமம் எம்.மங்கள், பழஞ்சூர் பி.வி.லாரன்ஸ், ஏ.கே.தமிழ், ராம்ஜி, பாஸ்கர், ஜெயகுமார், ஏ.பி.அஜித் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேமம் ஊராட்சி, புதுமாநகர் கிளை சார்பில் 4வது வார்டு உறுப்பினர் மூ.உதயகுமார் தலைமையில் கிளை நிர்வாகிகள் எஸ்.ரவீந்திரன், பலராமன், ராதாகிருஷ்ணன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை வழங்கினர்.

The post புரட்சி பாரதம் கட்சி நிறுவனர் பூவை எம்.மூர்த்தி பிறந்தநாள் விழா: பூவை எம்.ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ மலர் தூவி மரியாதை appeared first on Dinakaran.

Tags : Pratachi Bharatham Party ,Poovai M. Murthy ,Poovai M. Jagan Murthy ,MLA ,Thiruvallur ,Andersan Petty ,Poontamalli Union ,Bhuvai M. Murthy ,Bhuvai M. Jagan Murthy ,Dinakaran ,
× RELATED அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம்...