×

எலக்ட்ரிக் பொருட்களை திருடிய 2 பேர் கைது

ஆவடி: ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ(41). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் ஜெயின் நகரில் இவர் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வருகிறார். வீட்டிற்குத் தேவையான ரூ1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரிக் பொருட்களை மொத்தமாக வாங்கி ஒரு அறையில் இளங்கோ வைத்திருந்தார். இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள், எலக்ட்ரிக் வேலை செய்வதுபோல் நாடகமாடி, கடந்த மாதம் 24ம் தேதி பணியாட்கள் இல்லாத நேரத்தில், வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை திருடிச் சென்றனர். இதுகுறித்து திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் இளங்கோ புகார் அளித்தார்.

அதன்பேரில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் இளங்கோவின் வீட்டில் பொருட்களை திருடியது அரிக்கம்பேடு பகுதியைச் சேர்ந்த வினோத்(30) மற்றும் சம்பத்(32) ஆகியோர் என்பது தெரியவந்தது. இருவரையும் நேற்று காலை அரிக்கம்பேடு ஏரிக்கரை பகுதியில் வைத்து கைது செய்த திருமுல்லைவாயில் போலீசார், அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post எலக்ட்ரிக் பொருட்களை திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Avadi ,Ilango ,Ayappakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் இணைக்கப்படாத வடிகாலால் தேங்கும் மழைநீர்