×

வடசென்னை வளர்ச்சிக்கு என்று முதல் முறையாக திமுக ஆட்சியில் தான் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு: பேரவையில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி பேச்சு

சென்னை: வடசென்னை வளர்ச்சிக்கு என்று முதல் முறையாக திமுக ஆட்சியில் தான் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று சட்டசபையில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி பேசினார். சட்டசபையில் வணிக வரி மற்றும் செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி (திமுக) பேசியதாவது: வடசென்னை பகுதிக்கு கிட்டத்தட்ட 1950லிருந்து வளர்ச்சி திட்டத்திற்கு என்று பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியதை நான் பார்த்தே இல்லை. அந்த வகையில் முதல் முறையாக வடசென்னை வளர்ச்சிக்கு 2023-2024ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மட்டும் ரூ.1000 கோடியை ஒதுக்கி தந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அதே போல ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.147 கோடியில் புதிய பன்னோக்கு மருத்துவ பிரிவும், செவிலியர் பயிற்சி பள்ளி கட்டிடத்திற்கு நிதி ஒதுக்கிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஒருவரின் சொத்தை தவறாக பதிவு செய்தால் அது ரத்து செய்யப்படும் என்று அறிவித்த முதல்வருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இதனால், லட்சக்கணக்கானோர் சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது போன்று சொத்தை தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்திற்கு சென்றால் இந்த வழக்கு முடியவே குறைந்தப்பட்சம் 30 ஆண்டுகள் வரை ஆகும். அந்த நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் திராவிட மாடல் ஆட்சி தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதியிலும் மகத்தான வெற்றியை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

The post வடசென்னை வளர்ச்சிக்கு என்று முதல் முறையாக திமுக ஆட்சியில் தான் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு: பேரவையில் ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி பேச்சு appeared first on Dinakaran.

Tags : DMK ,North Chennai ,Rayapuram ,MLA ,Itreem Murthy ,Chennai ,
× RELATED திமுகவிற்கும் வடசென்னைக்குமான உறவு...