×

பிரம்மாண்ட வெற்றியை நோக்கி திமுக: 9 மாவட்ட ஊராட்சிகளையும் திமுகவே கைப்பற்றுகிறது.. படுதோல்வி அடைகிறது அதிமுக!!

சென்னை : தமிழகத்தில் விடுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. 140 மாவட்ட கவுன்சிலர், 1380 ஒன்றிய கவுன்சிலர், 2901 ஊராட்சி தலைவர், 22,581 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என 27 ஆயிரத்து 003 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 28 மாவட்டங்களில் விடுபட்ட 789 பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதுவரை வெளியான முடிவுகளின் படி 9 மாவட்ட ஊராட்சிகளையும் திமுகவே கைப்பற்றுகிறது.74 ஊராட்சி ஒன்றியங்களையும் திமுக கூட்டணியே கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதனிடையே 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக படுதோல்வியை சந்திக்கிறது.எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர் செல்வம் பிரசாரம் ஈடுபடாததால் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.6 மாதங்களுக்கு முன் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக தற்போது ஒரு ஊராட்சி ஒன்றியத்தைக் கூட பிடிக்க முடியவில்லை.* 140 மாவட்ட கவுன்சிலர் இடங்களில் 118 இடங்களில் திமுக கைப்பற்றுகிறது. 5 இடங்கள் மட்டுமே அதிமுக வசம் உள்ளது. *1380 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் 213 இடங்களை திமுக தன் வசம் ஆக்கி உள்ளது. 25 இடங்களில் அதிமுக கைப்பற்றுகிறது.  …

The post பிரம்மாண்ட வெற்றியை நோக்கி திமுக: 9 மாவட்ட ஊராட்சிகளையும் திமுகவே கைப்பற்றுகிறது.. படுதோல்வி அடைகிறது அதிமுக!! appeared first on Dinakaran.

Tags : Towers ,Chennai ,Kanchipuram ,Chengalputtu ,Viluppuram ,Kallakkurichi ,Tirunelveli ,Thenkasi ,Velur ,Ranippet ,Thirupathur ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...