×

தவறான கருத்துகளை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள்

சென்னை: தமிழக பாஜ சிறுபான்மை பிரிவு தலைவரான டெய்சி சரணின் மகளான ஷர்மிகா, ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கும் போது சர்ச்சைக்குரிய வகையில் மருத்துவக்குறிப்புகளை வழங்கியதால் சிக்கலில் மாட்டினார். இதையடுத்து ஷர்மிகா ஜனவரி 24ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குநரகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனைத் தொடர்ந்து தான் கூறிய கருத்துகளுக்கு மன்னிப்பு கேட்டு ஷர்மிகா வீடியோ பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் மீண்டும் இந்திய மருத்துவ ஆணையரகத்தில் ஷர்மிகா மீது இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் ஷர்மிகாவின் மருத்து குறிப்புகளைப் பின்பற்றியதால் பாதிப்படைந்ததாக 2 பெண்கள் எழுத்துப்பூர்வ புகார் அளித்துள்ளனர். ஏற்கனவே இந்திய மருத்துவ ஆணையரகம் தாமாக முன்வந்து ஷர்மிகா மீது விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் இரண்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அத்துறை அதிகாரிகள் கூறுகையில்: சித்த மருத்துவர் ஷர்மிகா அளித்த குறிப்புகள் பயன் அளிக்கவில்லை, பக்க விளைவுகள் ஏற்பட்டன என்ற அடிப்படையில் இரண்டு புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதனால் விரைவில் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

The post தவறான கருத்துகளை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சித்த மருத்துவர் ஷர்மிகா மீது மேலும் 2 புகார்கள் appeared first on Dinakaran.

Tags : Siddha ,Sharmika ,Chennai ,Tamil Nadu ,BJP ,Wing Leader ,Daisy Charan ,
× RELATED ஆவடி சித்த மருத்துவர் மற்றும் அவரது...