×

புழல் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் விளையாட்டு திடல்: அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார்

புழல்: புழல் பகுதியில், இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடலை நேற்று அமைச்சர் மஸ்தான் துவக்கி வைத்தார். பின்னர், வீரர்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை அவர் வழங்கினார். புழல், காவாங்கரையில் இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 328 குடும்பங்களைச் சேர்ந்த 926 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உடல்நலனை பேணி பாதுகாக்க, ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு, விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்படும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். அதன்படி, புழலில் இலங்கை தமிழர் அகதிகள் மறுவாழ்வு முகாமில் உள்ள காலியிடத்தில் விளையாட்டு மைதானம் தயாரானது.

இதனை, சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். பின்னர், அங்குள்ள இளைஞர்களுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில், மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, அயலார் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் ரமேஷ், ஜெசிந்தா லாசரஸ், சூரியகுமாரி, மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால், வடக்கு பகுதி திமுக செயலாளர் வழக்கறிஞர் புழல் நாராயணன், வட்ட செயலாளர்கள் ஐகோர்ட் குப்பன், சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post புழல் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாமில் விளையாட்டு திடல்: அமைச்சர் மஸ்தான் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Minister ,Mastan ,Sri Lankan ,Refugee Rehabilitation Camp ,Dinakaran ,
× RELATED புழல் ஏரியில் நீர் இருப்பு 3 டிஎம்சியாக அதிகரிப்பு