×

சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரம் மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா

சிம்லா: சிறுவனின் உதட்டில் முத்தமிடும் வீடியோ வைரலான நிலையில், அதற்காக திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். திபெத் புத்த மத தலைவரான தலாய் லாமா சிறுவன் ஒருவனிடம் தன் நாக்கில் முத்தமிட சொல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், மேடையில் அமர்ந்து இருக்கும் தலாய் லாமாவுக்கு மரியாதை செலுத்த அருகே வந்த சிறுவனை பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறார். இதனை பார்த்த அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். சில வினாடிகளுக்குப் பிறகு தனது நாக்கை வெளியே நீட்டி அதனை முத்தமிடும்படி தலாய் லாமா சிறுவனை வலியுறுத்துகிறார்.

முதலில் மறுக்கும் விதமாக பின்னே செல்லும் சிறுவனின் கையை பிடித்து இழுக்கவும் அவன் தலாய் லாமாவின் நாக்கில் முத்தமிட்டுவிட்டு செல்கிறான். இந்த வீடியோவுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறுவனின் உதட்டில் முத்தமிட்டதற்கு தலாய் லாமா மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறுவன், அவரது குடும்பம், நண்பர்கள் மட்டுமின்றி உலக சகோதரர்களிடமும் இதற்காக மன்னிப்பு கேட்கிறேன். எனது செயல் காயப்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்,’’ என்று கூறியுள்ளார். பொது இடம், கேமரா முன்பு கேலிக்காக அவர் விளையாட்டுத்தனமாக நடந்து கொள்வது வழக்கம் என தலாய்லாமா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

The post சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரம் மன்னிப்பு கேட்டார் தலாய் லாமா appeared first on Dinakaran.

Tags : Dalai Lama ,
× RELATED நான் இந்தியாவின் நீண்ட கால விருந்தினர்: தலாய் லாமா பெருமிதம்