×

கல்குவாரியை மூட வலியுறுத்தி கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்டது நெற்குணம்பட்டு கிராமம். இப்பகுதியில் ஏற்கனவே இரண்டு கல் குவாரிகள் உள்ளன. இந்நிலையில், மூன்றாவதாக புதிய கல்குவாரி கடந்த சில தினங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுதொடர்பாக பலமுறை மனு அளித்தும் பலன் இல்லை. இந்நிலையில், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்தை முற்றுகையிட்டு தங்கள் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கல்குவாரியை உடனடியாக மூட வேண்டும்.

குவாரியால் குடிதண்ணீர் தட்டுப்பாடு, சுகாதார சீர்கேடு, விவசாய நிலம் பாதிப்பு, கனரக வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றது என்றும், இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை மனு அளித்தோம். அதுதொடர்பாக, எந்தவித நடவடிக்கையும் இல்லை. மேலும், இதுபற்றி கேட்கும் பொதுமக்கள் மீதும், அரசு அலுவலகங்களை நாடும் மனுதாரர்கள் மீதும் பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது. ஆகவே கல்குவாரியை மூட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து, கலெக்டர், ‘‘வருவாய் கோட்டாட்சியர் மூலம் சம்பவ இடத்தில் மக்கள் முன்னிலையில் நேரடி விசாரணை நடைபெறும். அதைத்தொடர்ந்து, கல்குவாரி மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post கல்குவாரியை மூட வலியுறுத்தி கலெக்டரை முற்றுகையிட்ட பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Nelkunampattu ,Seiyur ,Dinakaran ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!